டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 133 ரன்னுடனும், சண்டிமல் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
அரைசதம் அடித்த தில்ருவான் பெரேரா
நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சண்டிமல் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த டிக்வெல்லா 52 ரன்னும், பெரேரா 58 ரன்னும் எடுத்தனர். கருணாரத்னே 196 ரன்னில் ஆட்டம் இழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
கருணாரத்னேயின் அபார ஆட்டத்தால் இலங்கை முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
அரைசதம் அடித்த டிக்வெல்லா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி