செய்திகள்

நியூசிலாந்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியில் மாற்றமில்லை

நியூசிலாந்துக்கு எதிரான 3 மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #PAKvNZ

மாலை மலர்

துபாயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 184 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த டெஸ்டில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

3-வது போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-