செய்திகள்

வீட்டு சுவற்றில் 'ஹிந்துஸ்தான் சிந்தாபாத்' என எழுதிய பாகிஸ்தான் வாலிபர் மீது தேசத்துரோக வழக்கு

வீட்டு சுவற்றில் இந்தியாவுக்கு ஆதரவான கருத்து எழுதிய பாகிஸ்தான் வாலிபரை தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹிந்துஸ்தான் என்ற பெர்சியன் மொழி வார்த்தையானது தெற்கு ஆசியாவை குறிக்கும். ஆனால், காலப்போக்கில் இது இந்தியாவை குறிப்பதாகவே கருத்தப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்குவா மாகாணத்தில் உள்ள நரா அமாசி நகரைச் சேர்ந்த சையத் ஷா என்ற வாலிபர் தனது வீட்டில் சுவரில் 'ஹிந்துஸ்தான் சிந்தாபாத்' என்று எழுதி வைத்திருந்தார்.

இந்தியாவிற்கு ஆதரவான வாசகத்தை அழித்து விடுமாறு உள்ளூர் வாசிகள் கூறியுள்ளனர். அது நாட்டின் பெருமையை காயப்படுத்துவதாக உள்ளது என எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் அந்த வாலிபர் அதனை கண்டுக்கொள்ளவில்லை. அந்த வாசகத்தை பலரும் புகைப்படம் எடுத்து போலீசாருக்கு அனுப்பு வைத்துள்ளனர்.

இதையடுத்து, சையத் மீது போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். உயர் அதிகாரிகளின் ஆணையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.