இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானியர் ஒருவர் கைது 
செய்திகள்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானியர் ஒருவர் கைது

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்ட இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரர்கள் அனைவரும் இரவும் பகலும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் பஞ்சாப் மாநில இரு நாட்டு எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய ஒரு நபரை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று இரவு கைது செய்தனர். விசாரணையில், அவர் பாகிஸ்தான் தோபா தேக் சிங் 

மாவட்டத்தின் கமாலியா கிராமத்தைச் சேர்ந்த யகாபு என்பது தெரிய வந்துள்ளது.

சில ஆவணங்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அவர் பயங்கரவாதியா என்ற கோணத்தில் விசாரணைநடந்து வருகிறது.