செய்திகள்

2-வது டெஸ்ட்: சேஸ் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் நாளில் சேஸின் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது.

அதன்படி பிராத்வைட், பொவெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆமிர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெட்மையர் 1 ரன்னிலும், ஹோப் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் பொவெல் 38 ரன்னில் வெளியேறினார்.

ஆனால் 5-வது வீரராக களம் இறங்கிய சேஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்குத் துணையாக கேப்டன் ஜேசன் ஹோல்டரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டம் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT