நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வங்காள தேசம் 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டம் எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதேபோல் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் இடையிலான ஆட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆரம்ப கால கட்டத்தில் வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற்று விடும். தற்போது பாகிஸ்தான் கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.
1986-ம் ஆண்டு முதல் 2014 வரை பாகிஸ்தான் - வங்காள தேசம் இடையில் 32 போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 31 வெற்றிகளை ருசித்தது. ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்திதது.