செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு - இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களால் இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்தனர். #Pakistan #India #JammuKashmir

ஜம்மு:

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கோடு அருகே உள்ள ஹிராநகர் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை 11 மணி அளவில் சிறிய ரக ஆயுதங்களால் இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் சரியான பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் இந்திய ராணுவ தரப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை என ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2 வாரமாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளான பூஞ்ச், ரஜோரி செக்டர் பகுதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  #Pakistan #India #JammuKashmir 

SCROLL FOR NEXT