துப்பாக்கிச்சூடு 
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் இந்திய எல்லைகளை நோக்கி சிறிய அளவிலான கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். 

பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இதேபோல், ஜம்மு காஷ்மீரின் மெண்டார், கிருஷ்ணா கட் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.