ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள காஸ்மா மற்றும் கிர்னி செக்டார் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் இன்று மதியம் 1.40 மணிக்கு அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலின் சேத விவரங்கள் குறித்த் தகவல் வெளியிடப்படவில்லை.