செய்திகள்

ஜலாலாபாத் நகரில் பாகிஸ்தான் தூதரகம் மீண்டும் திறப்பு

உள்நாட்டு தலையீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் மூடப்பட்ட பாகிஸ்தான் துணை தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. #Pakistanconsulate

மாலை மலர்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அண்டைநாடான ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியின் அருகாமையில் உள்ள இடங்களின்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கேயுள்ள ஜலாலாபாத் நகரில் இயங்கிவரும் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் காரில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை கடத்திச் சென்றதாக செய்திகள் வந்தன.

மேலும், ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு விசாவுக்காக விண்ணப்பித்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் விதிக்கபடும் நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்கர் மாகாண கவர்னர் ஹயாத்துல்லா ஹயாத் கண்டனம் தெரிவித்திருந்தார்.