கோப்புப் படம் 
செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் இன்றும் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை துப்பாக்கிகளால் சுட்டு நடத்திய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மாலை மலர்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்திய வீரர்களும் இந்த தாக்குதலுக்கு தகுந்த வகையில் பதிலடி கொடுத்து வருகின்றனர். கடைசியாக கிடைத்த தகவல்களின்படி, இருதரப்பினரிடையே நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.