லண்டன்:
8-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
இந்நிலையில், இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் ஸ்டேடியத்தில் இந்தப்போட்டி நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியில் அஸ்வின் காயத்தில்இருந்து மீண்டபோதிலும், இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை.
இந்திய அணி விவரம்: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ஷிகர் தவான், யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
பாகிஸ்தான் அணி: சர்பிராஸ் அகமது (கேப்டன்), அசார் அலி, அகமது ஷேசாத், பாபர் ஆசம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், இமாத் வாசிம், சகாப் கான், முகமது அமீர், வகாப் ரியாஸ், ஹசன் அலி.