செய்திகள்

தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் போக்கை ஏற்க முடியாது; இந்தியா திட்டவட்டம்

தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் போக்கை ஏற்க முடியாது என இந்திய ராணுவத்தின் இயக்குனர் ஜெனரல் இன்று அந்நாட்டிடம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்:

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாக இருநாட்டு ராணுவத்தின் இயக்குனர் ஜெனரல்களும் அவ்வப்போது பேசுவதுண்டு. இந்த பேச்சு வார்த்தையின்போது வழிதவறி வந்து சிக்கியவர்களை ஒப்படைப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்திய ராணுவத்தின் இயக்குனர் ஜெனரலுடன் உடனடியாக தொலைபேசி வழியாக பேச வேண்டும் என பாகிஸ்தானில் இருந்து இன்று அழைப்பு வந்தது. இந்த அழைப்பை ஏற்று இந்திய ராணுவத்தின் இயக்குனர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.பட் பாகிஸ்தான் ராணுவத்தின் இயக்குனர் ஜெனரலுடன் பேசினார்.

இந்திய எல்லையில் நடைபெறும் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் போக்கை ஏற்க முடியாது என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT