ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மாலை முதல் அத்துமீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக ராக்கெட் லாஞ்சரை கொண்டு இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று மாலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு இந்திய நிலைகள் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலையடுத்து இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று, இதே பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஒரு தம்பதியினர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்திலிருந்து 29 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.