செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் படையினர் சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் எல்லையோரத்தில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நேற்று இரவு சிறிய ரக மோட்டார் குண்டுகள் மூலம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

நவ்ஷெரா பகுதியில் உள்ள அன்வாஸ், லாம், சர்யா மற்றும் புக்ரானி பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர், #Tamilnews