செய்திகள்

எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். #PakistanViolatesTruce #JKAttack

மாலை மலர்

காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்கும்போது, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.

அவ்வகையில், மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், சுந்தர்பானி செக்டார் கோவூர் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் வருண் என்ற வீரர் உயிரிழந்தார்.