ராஜஸ்தானில் 13-ம் நூற்றாண்டில் நடந்த சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து இந்தியின் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமா படம் எடுக்கப்பட்டுள்ளது.
ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 1-ந் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியை பத்மினி என்றும் பத்மாணி என்றும் அழைப்பார்கள்.
13-ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாபுதீன் கில்ஜி ராணி பத்மாவதியை அடையும் நோக்கத்தில் சித்தூர் மீது படை எடுத்தான் என்றும், அவனிடம் சிக்காமல் இருப்பதற்காக ராணி பத்மாவதியின் 15,000 ரஜ புத்ர வம்சத்தைக் சேர்ந்த பெண்களும் தீ வார்த்து அதில் குறித்து உயிர் விட்டனர்.
பத்மாவதி படத்துக்கு ரஜபுத்திர வம்சத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வசிக்கிறார்கள்.
குஜராத்தில் தேர்தல் நடப்பதால் பத்மாவதி படத்தை திரையிட்டால் குறிப்பிட்ட பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் படத்தை திரையிடக்கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ரஜபுத்திர வம்சத்தினரும் பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராணி பத்மினியின் கோட்டையான சித்தூர் நகரம் சித்தூர்கார் என்று அழைக்கப்படுகிறது. அங்கு வசிக்கும் ரஜபுத்ர வம்சத்தினர் டிசம்பர் 1-ந் தேதி படம் ரிலீசாவதை கண்டித்து அன்றைய தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பை சமூக வலை தளங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர். சித்தூர் கார் நகரில் அவர்கள் தினமும் அமைதி ஊர்வலம் கடைபிடித்து வருகிறார்கள். இதில் டைரக்டர் பன்சாலியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
இதுபற்றி ரஜபுத்திர வம்சத்தினர் கூறும் போது, 1303-ம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜி சித்தூர் மீது படை எடுத்தது உண்மை. ஆனால் ராணி பத்மினிக்காக அல்ல. எனவே இது திரித்து கூறப்பட்டுள்ளது. எந்த ரஜ புத்திரனும் தனது மனைவியை இன்னொருவருக்கு காட்டமாட்டான், எனவே பத்மினியை கில்ஜி கண்ணாடியை பார்த்தான் என்ற கேள்வியே எழவில்லை என்று தெரிவித்தனர்.
கவிஞர் மாலிக் முகம்மத் ஜெயசியின் கவிதையில் தான் கண்ணாடி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக போராட்ட குழு செய்தி தொடர்பாளர் லோகேந்திர சிங் சுந்தாவத் தெரிவித்தார்.