நகை பறிப்பு 
செய்திகள்

படப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

படப்பை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

படப்பை:

படப்பை அடுத்த வரனாவசி பகுதியை சேர்ந்தவர் பிரேமா(67). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் குடிக்க தண்ணீர் கேட்டார். பின்னர் திடீரென வீட்டில் புகுந்து பிரேமாவை தாக்கிவிட்டு அவர் அணிந்து இருந்த 7 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

இது குறித்து பிரேமா ஒரகடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்நிலையில் ஒரகடம் மேம்பாலம் கீழே சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நேற்று நின்று கொண்டு இருந்தார்.

விசாரணை நடத்தியதில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆன்டனி தேவா அரவிந்த் (22) என்று தெரியவந்தது. ஒரகடம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்டதை ஒப்புக் கொண்டார். எனவே அவரை கைது செய்து 7 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.