செய்திகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஜூலை 3 வரை ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்யக் கூடாது - டெல்லி ஐகோர்ட்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. #INXMediaCase #ChidambaramGetsProtection

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி  சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.

சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டிய சூழ்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மனுவை பரிசீலித்த ஐகோர்ட், ஜூலை 3-ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ப.சிதம்பரம் மனுவிற்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT