ப சிதம்பரம் 
செய்திகள்

பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் - ப.சிதம்பரம் கருத்து

பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது.

தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக குறையும் என்று ஐ.எம்.எப் தலைமை ஆலோசகர் கீதா கோபிநாத் கணித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறைந்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன். ஐ.எம்.எப் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கணித்தது கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.

அவர் ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து இருந்தார். தற்போது பொருளாதார வளர்ச்சி குறையலாம் என்று கணித்துள்ளார். இதனால் ஐ.எம்.எப் மற்றும் கீதா கோபிநாத் மீது மத்திய மந்திரிகள் நடத்தவுள்ள தாக்குதலுக்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.