செய்திகள்

மேலடுக்கு சுழற்சியால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை:

சென்னை வானிலை மைய அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்த வரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சீபுரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி, லால்குடியில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT