பேஸ்புக்கின் ரத்த தான அம்சத்தில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த அம்சம் வங்கதேசத்திலும் வழங்க பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்தியவில் ரத்த தானம் செய்பவர்களுக்கு உதவியாய் இருக்கும் நோக்கில் இந்த அம்சம் முதற்கட்டமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவில் இதுவரை மட்டும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். ரத்தம் தேவைப்படுவோர்க்கு மட்டுமின்றி ரத்தம் வழங்குவோரை நிறுவனங்கள் தரப்பில் சுலபமாக தொடர்பு கொள்ள பேஸ்புக் டூல்கள் உதவியாய் இருக்கும் என சோஷியல் பிளட் நிறுவனத்தின் துணை தலைவர் நயோமி கிளெய்ட் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பேஸ்புக்கில் ரத்த தானம் குறித்த நிகழ்வுகளை உருவாக்க முடியும். இதன் மூலம் ரத்த தானம் செய்ய விரும்புவோரை மிக எளிமையாக தொடர்பு கொள்ள முடியும்.
2018-ம் ஆண்டின் துவக்கத்தில் பேஸ்புக் ரத்த தான அம்சம் வங்கதேசத்திற்கும் வழங்கப்படும், இந்தியா போன்றே வங்கதேசத்திலும் வாராவாரம் ரத்த தானம் செய்வோர் தொடர்ந்து விருப்பம் தெரிவிப்பர் என கிளெய்ட் தெரிவித்தார். ரத்த தானம் மட்டுமின்றி பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி புதிய டூல் மற்றும் அம்சங்களை பயன்படுத்தி மற்றவர்களை பாதுகாப்பாக இருக்க உதவி செய்ய முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
பேஸ்புக்கில் புதிதாக மென்டார்ஷிப் கனெக்ஷன் புரோகிராம், புதிய நிதி திரட்டும் டூல், ரத்த தான நிகழஅவு மற்றும் தற்கொலை தடுப்பு நிகழ்வு சார்ந்த அம்சங்களை வழங்கப்பட இருப்பதாக சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.