புதுடெல்லி:
இந்தியாவில் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இ4 பிளஸ் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 12-ம் தேதி துவங்கிய விற்பனையின் முதல் நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிமிடத்திற்கு 580 யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ப்ளிப்கார்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கான வரவேற்பு வட இந்திய நகரங்களில் அதிகமாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும் 12 சதவிகிதம் விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளதாக ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
* மெமரியை நீட்டிக்கும் வசதி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் f/2.0 அப்ரேச்சர்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5,000 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்தியாவில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படும் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு அறிமுக சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதன்படி ப்ளிபிகார்ட் தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களை பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் மாடலுக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.9000 வரை தள்ளுபடி பெற முடியும்.
எக்சேஞ்ச் சலுகையை தவிர இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது.
மேலும் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுவதோடு பைபேக் கியாரண்டியின் கீழ் ரூ.4000 வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் நோக்கியா 3, ரெட்மி நோட் 4 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.