செய்திகள்

ஓட்டேரியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

ஓட்டேரியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

பெரம்பூர்:

ஓட்டேரி, ஏகாஸ்கிபுரம் 4-வது தெருவில் வசித்து வந்தவர் பாபு (வயது 23). சவுண்ட் சர்வீசில் வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியில் நடந்த மாதா ஆலய விழாவுக்காக மின்விளக்கு அமைத்து இருந்தார்.

இன்று அதிகாலை அப்பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. இதையடுத்து அங்கு கட்டப்பட்டு இருந்த மின் விளக்குகளை பாபு கழற்ற முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பாபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேக்பாபு விசாரணை நடத்தி வருகிறார்.