தமிழக அரசு 
செய்திகள்

அரசு ஊழியர்கள் குறித்த நேரத்துக்குள் பணிக்கு வர ஆணை

அரசு ஊழியர்கள் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழக அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்கள். அரசு ஊழியர்கள் இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்று அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கொரோனா காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.