கைது 
செய்திகள்

ஒரத்தநாடு அருகே மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்- டிரைவர் கைது

ஒரத்தநாடு அருகே மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

மாலை மலர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு தொடக்கப்பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த பகுதியில் உள்ள காட்டாற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சின்னமங்குடியை சேர்ந்த செல்வக்குமார் (வயது40) என்பவரை கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.