செய்திகள்

ஒரத்தநாடு அருகே கார் மோதி கொத்தனார் பலி

ஒரத்தநாடு அருகே கார் மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பனையார் கோட்டையை சேர்ந்தவர் கோபால் சாமி (60). கொத்தனார். இவர் நேற்று மாலை தஞ்சை - மன்னார்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் கோபால் சாமி சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று கோபால்சாமி பிணத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்டதும் டிரைவர் தப்பி ஓடி விட்டார். காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT