ஓபிஎஸ் - இபிஎஸ் 
செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் டுவிட்டர் பக்கத்தில் ‘‘வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து எனது உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். #HappyDiwali’’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்று தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.