ஏசி சண்முகம் 
செய்திகள்

ஓ.பி.எஸ்.-10 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது- ஏ.சி.சண்முகம்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது என்று புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க கோரும் வழக்கின் மீதான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. பல்வேறு தரப்பினரின், பலவித யூகங்களை எல்லாம் பொய்யாக்கி, இறுதியில் ‘தருமமே என்றும் வெல்லும்’ என்று கூறத்தக்க வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பு, மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம் எதற்கெடுத்தாலும் வழக்கு தொடர்பவர்களுக்கு படிப்பினை கிடைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்தின் பொறுமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.