செய்திகள்

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: நாம் தமிழர் கட்சியினர் கைது

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி பழைய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி:

மதுரையில் இருந்து இன்று காலை புறப்பட்ட ராம ராஜ்ஜிய ரத யாத்திரை மதியம் 12 மணியளவில் பரமக்குடியை சென்றடைந்தது.

அங்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ரதத்துக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி பழைய பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.

உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ராமராஜ்ஜிய ரத யாத்திரை தொடர்ந்து மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக ராமேசுவரத்திற்கு புறப்பட்டது. #tamilnews

SCROLL FOR NEXT