பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி 
செய்திகள்

காஷ்மீரின் 3 முன்னாள் முதல்வர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை

காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மாலை மலர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இதை எதிர்த்து காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பிரிவினைவாத குழுக்களின் தலைவர்களும் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்களும் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் பரவலாக ஈடுபட்டனர்.

போராட்டங்கள் மேலும் பரவாத வகையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையதளங்களுக்கான இணைப்புகள் மற்றும் கைபேசி இணைப்புகளும் சில மாதங்கள் முடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடர்பாக, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகள் மோடி தலைமையிலான ஆட்சியின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் நசுக்கப்படுகின்றன.