செய்திகள்

ஃபேஸ் அன்லாக் மற்றும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட கொண்ட ஒப்போ F5 ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் F5 செல்ஃபி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்னறிவு வசதி கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஒப்போ நிறுவனத்தின் F5 ஸ்மார்ட்போன் பிலிப்பைன்சில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ F5 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி+18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

செல்ஃபி எக்ஸ்பெர்ட் பெயரிற்கு ஏற்றார் போல் 20 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 200 ஃபேஷியல் ரெகஃனீஷன் ஸ்பாட் கொண்டு செல்ஃபிக்களை அழகாக படமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் முகத்தை கொண்டு ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் வசதியை வழங்குகிறது. யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளிட்டவை தனித்தனியே வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு வேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்யும் O-ஷேர் தொழில்நுட்பத்தையும் ஒப்போ F5 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

ஒப்போ F5 சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல், 18:9 FHD+ ஃபுல் ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm பிராசஸர்
- ARM Mali G71 MP2 GPU கிராஃபிக்ஸ்
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் மற்றும் கலர்ஓ.எஸ். 3.2
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8 அப்ரேச்சர்
- 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3200 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ F5 ஸ்மார்ட்போன் கோல்டு, பிளாக் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் மாடல் 307 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,985 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்று முன்பதிவு செய்யப்படும் ஒப்போ F5 விற்பனை நவம்பர் 3-ம் தேதி துவங்குகிறது.

இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 2-ம் தேதி வெளியிடப்படும் என ஒப்போ ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா, தென்கிழக்கு ஆசிய சந்தைகளான இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட்ட இடங்களிலும் கிடைக்கும்.