சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் ஸ்மார்ட்போன் நவம்பர் 2-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஒப்போ நிறுவனம் F5 ஸ்மார்ட்போனினை நவம்பர் 2-இல் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் செல்ஃபி பிரியர்களுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் வெளியீட்டு அழைப்பிதழில் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் என்ற தகவலை தெரிவித்துள்ளது. அதன் போஸ்டரில் "Capture the real you." என்ற வாசகம் ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா சிறப்பானதாக இருக்கும் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் ஒப்போ F5 ஸ்மார்ட்போன் இந்தியாவை தொடர்ந்து இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்போ F5 ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி மற்றும் 1080x2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் ஒப்போ F3 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட செல்ஃபி டூல் ஒன்று வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ A57 ஸ்மார்ட்போனின் ரீபிரான்டு பதிப்பான ஒப்போ F3 லைட் VND 5,490,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் எச்டி, 720x1280 பிக்சல் எல்சிடி, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர், அட்ரினோ 505 GPU கிராஃபிக்ஸ் மற்றும் 3 ஜிபி ரேம் மற்றும் 2900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.