சித்தரிப்பு படம் 
செய்திகள்

கொரோனா பீதி: நாளை நள்ளிரவு முதல் உள்நாட்டு விமானச் சேவைகள் நிறுத்தம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்து வரும் நிலையில் நாளை நள்ளிரவு முதல் உள்நாட்டு விமானச் சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

கொடிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்து 43 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 15 ஆயிமாக உயர்ந்துள்ளது.
 

இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 428 ஆக அதிகரித்து, பலி எண்ணிக்கையும் 8 ஆக உயர்ந்துள்ளது.

எனினும், உள்நாட்டு சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.