செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை மீட்க நான்கு நாட்களாக போராடும் அதிகாரிகள்

பஞ்சாபில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுவனை மீட்க நான்கு நாட்களாக அதிகாரிகள் போராடி வருகிறார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்றோடு நான்கு நாட்களாகியும் சிறுவனை மீட்க முடியவில்லை.

7 அங்குல அகலம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் 125 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். அவனுக்கு உணவு ஏதும் வழங்கப்படவில்லை. இதனால் அவன் மயக்க நிலையில் உள்ளான். அவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறும் மீட்புக் குழுவினர், இன்றைக்குள் சிறுவனை மீட்கும் பணி முடிவடைந்து விடும் என நம்பிக்கையூட்டும் வகையில் கூறியுள்ளனர்.