மேட்டூர் அணை 
செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 957 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் 100.01 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்தது.

அணைக்கு வினாடிக்கு 1,252 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 100.03 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

இதன்படி வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.