செய்திகள்

ஓ.பன்னீர் செல்வம் திடீர் டெல்லி பயணம் - பிரதமர், தேர்தல் ஆணையரை சந்திக்க இருப்பதாக தகவல்

முன்னால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், நாளை மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலை மலர்

முன்னால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், நாளை மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க இரண்டாக பிளவடைந்ததையடுத்து அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தற்போது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், இன்று இரவு அவர் திடீரென டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

நாளை மாலை சுமார் 4.30 மணியளவில் பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர் செல்வம் உடன் மசூதனன், மைத்ரேயன் ஆகியோரும் செல்ல இருக்கின்றனர். பிரதமர் உடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியையும் சந்திக்க இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோருவதற்கு சான்றாக சில ஆவணங்களை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று காலமான மத்திய மந்திரி அணில் தாவே இறுதிச்சடங்கிலும் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.