செய்திகள்

ஓ.பன்னீர் செல்வம் எதிர் கட்சி அல்ல, எங்கள் பங்காளிதான்: டி.டி.வி.தினகரன் - திவாகரன் கூட்டாக பேட்டி

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எதிர்க்கட்சி கிடையாது. அவர் எங்கள் பங்காளிதான் என்று டி.டி.வி. தினகரன் மற்றும் திவாகரன் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

அ.தி.மு.க அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன்  தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தஞ்சைக்கு துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால் அரசியல் பேச விரும்பவில்லை. 4-ந் தேதிக்கு பின்னர் பேசுகிறேன்.கட்சியை பலப்படுத்துவது தான் எனது முதல் பணி. பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.

எங்கள் குடும்பத்தினர் தலையிட்டதால் இரு அணிகளும் இணைய முடியவில்லை என சிலர் தெரிவித்தனர். அதனால் கொஞ்ச நான் விலகி இருந்தேன்.

2019 பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தி வருகிறோம்.நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம். எங்கள் குடும்பத்திற்குள் பிரச்சினை இல்லை.

அமைச்சர்கள் சிலர் எனக்கு எதிராக இருப்பதாக சிலர் தெரிவித்தனர். அவர்களும் நிலைமையை புரிந்து செயல்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சகிகலாவின் தம்பி திவாகன் கூறியதாவது:-

தமிழகத்தில் நீட் தேர்வு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து செயல்பட்டது. அ.தி.மு.க. வை எதிர்க்க எதிர் கட்சிகள் ஒன்றாக இணைந்தால் தான் முடியும்.

அ.தி.மு.க.வில் இருந்து ஒரு தொண்டன் கூட வேறு கட்சிக்கு செல்லவில்லை. ஓ. பன்னீர் செல்வம் எதிர்க்கட்சி கிடையாது. அவர் எங்கள் பங்காளிதான்.

இவ்வாறு திவாகரன் கூறினார்.