சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி நேரடியாக பேசி தீர்வு காண வேண்டும். அதிக பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்குள்ளும் சண்டை சச்சரவுகள் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.