கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தமுள்ள 545 எம்.பி.க்களில் வெறும் 5 எம்.பி.க்களே 100 சதவிகித வருகையை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.பி.க்களின் வருகைப்பதிவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், மொத்தமுள்ள 545 எம்.பி.க்களில் வெறும் 5 எம்.பி.க்களே 100 சதவிகித வருகையை பதிவு செய்துள்ளனர். இது வெறும் 9 சதவிகிதமே ஆகும்.
பாந்தா தொகுதி உறுப்பினர் பைரோன்
பாந்தா தொகுதி உறுப்பினர் பைரோன் 100% வருகையுடன் அதிகபட்சமாக 1468 விவாதங்களில் பங்கேற்று முதலிடத்தில் உள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 59% வருகையை பதிவு செய்துள்ளார். ஆனால், அவரது மகன் ராகுல் காந்தி 54% வருகை மட்டுமே பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மற்றும் முக்கிய மந்திரிகளின் வருகைப்பதிவேடுகள் சரியாக பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த பா.ஜ.க எம்.பி வினோத் கண்ணா 50% வருகை பதிவு செய்துள்ளார்.