செய்திகள்

வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை ‘கிடுகிடு’ உயர்வு

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திராவிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னையில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. மழை காலம் வந்தால் குறிப்பாக வெங்காயம் விலை உயரும்.

கடந்த 1 வாரத்துக்கு முன்பு 1 கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது 1 கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விலை உயர்ந்து விட்டது.

பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.

கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்வதால் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தான் பெரிய வெங்காயம் அதிக அளவு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் அங்கும் மழை பெய்வதால் மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது.

இதே போல் மற்ற காய்கறி விலையும் உயர்ந்துள்ளது. வளசரவாக்கத்தில் இன்று விற்கப்பட்ட காய்கறி விலை கிலோவுக்கு வருமாறு:-

கொத்தமல்லி தழை 1 கட்டு இதற்கு முன்பு 5 ருபாய்க்கு கிடைத்தது. ஆனால் இப்போது 1 கட்டு ரூ.30 முதல் ரூ.35-க்கு விலை உயர்ந்து விட்டது.

இதேபோல் கீரை கட்டு 15 ரூபாய்க்கு விற்கிறார்கள். முருங்கை கீரை 1 கட்டு 10 ரூபாய்க்கும், புதினா கட்டு 8 ரூபாய்க்கும் விற்கிறார்கள்.