புதுடெல்லி:
ஒன்பிளஸ் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஓரியோ அப்டேட் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. கடந்த வாரம் ஆக்சிஜன் ஓ.எஸ். 5.0 பெயரில் ஒன்பிளஸ் 5 வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஓரியோ அப்டேட் வழங்கியது. எனினும் வாடிக்கையாளர்கள் பிழை சார்ந்த குற்றச்சாட்டு தெரிவித்ததால் அப்டேட் நிறுத்தப்பட்டது.
முந்தைய அப்டேட்டில் ஏற்பட்ட பிழை குறித்து முழுமையான விவரம் அறியப்படாத நிலையில், ஒன்பிளஸ் 5 வாடிக்கையாளர்களுக்கு ஓரியோ அப்டேட் வழங்கும் பணிகளை அந்நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளது. ஆக்சிஜன் ஓ.எஸ். 5.0.1 அப்டேட் மூலம் ஓரியோ அப்டேட் வழங்கி வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஆக்சிஜன் ஓ.எஸ். 5.0 பதிப்பில் வழங்கப்பட்ட அதே அம்சங்கள் மற்றும் அப்டேட்கள் புதிய அப்டேட்டிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டில் பிழை திருத்தங்கள் மற்றும் சில புதிய அம்சங்களை வழங்கியிருப்பதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
புதிய அப்டேட் செய்யும் முன் வாடிக்கையாளர்கள் தங்களது சாதனத்தில் உள்ள தகவல்களை பேக்கப் செய்து, ரீ-லாக் செய்ய வேண்டும். ரீ-லாக் செய்ததும் அப்டேட் செய்யலாம்.
மற்ற அம்சங்களை பொருத்த வரை புதிய ஆக்சிஜன் ஓ.எஸ். 5.0.1 அப்டேட்சில் புதிய கேமரா UI, புகைப்பட தரம், போர்டிரெயிட் மோட் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய அப்டேட் மூலம் அலாரம் காலண்டர் அம்சம், பேரலெல் ஆப், லிஃப்ட் அப் டிஸ்ப்ளேவில் புதிய வடிவமைப்பு, அடாப்டிவ் மாடல் ஸ்கிரீன் கேலிபரேஷன் மற்றும் டிசம்பர் மாத பாதுகாப்பு அப்டேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 5 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்
- 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- டேஷ் சார்ஜிங் வசதி
- ப்ளூடூத், என்எஃப்சி, வைபை
- எல்டிஇ, வோல்ட்இ