ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2017 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 5 சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முந்தைய ஒன்பிளஸ் 3 போன்றே இம்முறையும் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்த வகையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது பார்க்க சாம்சங் கேலக்ஸி S8 போன்றே காட்சியளிக்கிறது.
இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய ஒன்பிளஸ் 5T நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் ஒன்பிளஸ் 5 ஏற்கனவே விற்று தீர்ந்து வருகிறது.
18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவு 6.0 இன்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 5T சார்ந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கிஸ்மோசைனா வெளியிட்டுள்ள தகவல்களில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி+21060x1080 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மற்ற அம்சங்ளில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறப்படுகிறது.
கடந்தஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போனினை மேம்படுத்தப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸருடன் வெளியிட்டது. முந்தைய ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனில் 820 பிராசஸர் வழங்கப்பட்டது. இதேபோன்று கேமராவிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போனில் 16 எம்பி கேமரா வழங்கப்பட்டது.