ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2017-ம் ஆண்டின் இரண்டாவது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5T இன்று முதல் விற்பனை (open sale) செய்யப்படுகிறது. முன்னதாக நவம்பர் 21 மற்றும் நவம்பர் 24-ம் தேதிகளில் ஃபிளாஷ் முறையில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டது.
புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவை முறையே ரூ.32,999 மற்றும் ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தியாவில் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:
- 6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
- 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
- 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்
ஒன்பிளஸ் 5T அறிமுக சலுகைகள்:
ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் வாங்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிமுக சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 1008 ஜிபி டேட்டா 18 மாதங்களுக்கு வழங்கப்டுகிறது. எனினும் இந்த சலுகையை பெற ரூ.357 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா சுமார் 18 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் சோமாட்டோ கோல்டு சேவைக்கான ஒரு வருட சந்தா, 12-மாதங்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. (இதனை பெற கோடாக் 811 செயலியை இன்ஸ்டால் செய்து ரூ.1000 முன்பணம் செலுத்த வேண்டும்)
அமேசான் கின்டிள் ஸ்டோரில் ரூ.500 கிரெடிட், ரூ.300 அமேசான் பே பேலன்ஸ், புதிய அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், பிரைம் வீடியோ செயலி மூலம் வீடியோ பார்க்கும் போது அமேசான் பே பேலண்ஸ்-இல் ரூ.250 வழங்கப்படுகிறது.