மும்பை:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5 ஃபிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து அமேசான் தளத்தில் புதிய ஒன்பிளஸ் 5 விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் விற்பனையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து ஜூன் 27-ந்தேதி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது விற்பனைக்கு வாடிக்கையாளர்கள் எவ்வித முன்பதிவும் செய்ய வேண்டி அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லேட் கிரே நிறத்தில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 5 விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிட்நைட் பிளாக் நிறத்தில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமெரி கொண்ட ஒன்பிளஸ் 5 ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அமேசான் பே கிரெடிட், கின்டிள் சலுகைகள், கேஷ்பேக், டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஒன்பிளஸ் 5 சலுகைகள்:
புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு வாங்குவோருக்கு ரூ.1,500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூன் 27 மற்றும் ஜூன் 28-ந்தேதி மட்டுமே வழங்கப்படும். இத்துடன் அமேசான் பிரைம் வீடியோ ஆப் கொண்டு வாங்குவோருக்கு ரூ.250 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இந்த பணம் வாடிக்கையாளரின் அமேசான் பே வேலெட்டில் சேர்க்கப்படும்.
ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு 12 மாதங்களுக்கு இன்சூரன்ஸ் வசதி கோடக் 811 சேவிங்ஸ் செயலி மூலம் வழங்கப்படுகிறது. இதை ஆக்டிவேட் செய்ய ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். வோடபோன் சிம் கார்டு வைத்துள்ள ஒன்பிளஸ் 5 வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா விலையில் 10 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை முதல் ஐந்து ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜூன் 22 முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை ஒன்பிளஸ் 5 வாங்குவோருக்கு இந்த சலுகை வழங்கப்படும். இதேபோல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 9 ஜிபி அளவு கூடுதல் டேட்டா 1 ஜிபி விலையில் ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வோடபோன் ரெட் வாடிக்கையாளர்களில் மைவோடபோன் செயலி மூலம் லாக்-இன் செய்வோருக்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை ஜூன் 22-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதிக்குள் வாங்குவோருக்கு அமேசான் கின்டிள் ரூ.500 மதிப்புள்ள இ-புக் கிரெடிட் வழங்கப்படும். இந்த சலுகையை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் செயலியில் லாக்-இன் செய்ய வேண்டும்.
ஒன்பிளஸ் 5 சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்
* 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 3300 எம்ஏஎச் பேட்டரி
* டேஷ் சார்ஜிங் வசதி
* ப்ளூடூத், என்எஃப்சி, வைபை
* எல்டிஇ, வோல்ட்இ
ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனின் கைரேகை ஸ்கேனரை அழுத்தி பிடித்தால் பேடிஎம் பக்கம் திறக்கும் வசதி வழங்கப்படுகிறது. அமேசான் இந்தியா மட்டுமின்றி சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களிலும் பிரத்தியேக விழாக்கள் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.