மும்பை:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் கில்லர் சர்வதேச சந்தையைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 5 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். இதோடு ஒன்பிளஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையையும் ஒன்பிளஸ் 5 பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் 5 சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்
* 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 3300 எம்ஏஎச் பேட்டரி
* டேஷ் சார்ஜிங் வசதி
* ப்ளூடூத், என்எஃப்சி, வைபை
* எல்டிஇ, வோல்ட்இ
சர்வதேச சந்தையில் 6 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 5 479 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.31,000 மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட மாடல் 499 டாலர்கள் அதாவது இந்தி்ய மதிப்பில் ரூ.32,300 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவில் 6 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 5 ரூ.32,999 மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.