செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: பெண் அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் பெண் அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது

மாலை மலர்

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் டிரேடு மார்க் துணைப்பதிவாளராக பணியாற்றி வருபவர் கஸ்தூரி. இவர், வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 22 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள 14-வது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நடராஜன், குற்றம்சாட்டப்பட்ட கஸ்தூரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறி உள்ளார்.

மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.