ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா அருகே உள்ள உரி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து கடுமையாக தாக்குதல் நடத்தினர். சில மணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளுடனான சண்டை இன்னும் தொடர்வதாகவும் அங்கிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு இதே உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.