ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் பகுதியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எல்லையை கடந்து இந்திய பகுதிக்குள் தீவிரவாதி ஒருவன் நுழைந்துள்ளான்.
இதனை கவனித்து விட்ட பாதுகாப்பு படையினர் தீவிரவாதிக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்தும் அவன் இந்திய எல்லைக்குள் முன்னேறி வந்ததால் பாதுகாப்பு படையினர் தீவிரவாதியை சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.