மம்தா பானர்ஜி 
செய்திகள்

‘ஒரே நாடு’ என்று பேசும் பா.ஜனதா தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்காதது ஏன்? - மம்தா பானர்ஜி கேள்வி

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று பேசும் பா.ஜனதா, மக்களின் உயிரை காப்பாற்றும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க முடியாதா? என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலை மலர்

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று பா.ஜனதா எப்போது பார்த்தாலும் கூச்சலிடுகிறது. ஆனால், மக்களின் உயிரை காப்பாற்றும் தடுப்பூசிக்கு ஒரே விலையை நிர்ணயிக்க முடியாதா?